Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனரக வாகனம் - மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் ஒருவர் பலி

கனரக வாகனம் – மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் ஒருவர் பலி

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் கனரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சங்கானை நிற்சாமம் பகுதியை சேர்ந்த முகுந்தன் தீபா என்ற 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணுடன் பயணித்த அவரது இரண்டு பிள்ளைகள் காயம் அடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மானிப்பாய் பொலிசார் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பொலிஸார் வாகனம் செலுத்திய சாரதியை விட்டு விட்டு வேறொருவரை கைது செய்து வழக்கினை திசை திருப்ப முற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles