இலங்கையின் பிரபல நடிகரான தர்ஷன் தர்மராஜின் பெயர் வீதி ஒன்றிற்கு சூட்டப்படவுள்ளது.
தர்ஷன் தர்மராஜின் பிறப்பிடமான இறக்குவானையிலுள்ள வீதி ஒன்றிற்கே அவரது பெயர் சூட்டப்படவுள்ளது.
இந்த வீதி திறப்பு விழா எதிர்வரும் 27ம் திகதி காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை கொடக்காவெல பிரதேச சபை வழங்கியுள்ளது.
இலங்கையில் தமிழ் நடிகர் ஒருவரின் பெயர் வீதியொன்றிற்கு சூட்டப்படுகின்றமை இதுவே முதல் தடவையாகும்.