Saturday, April 19, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 வயது மகனை சித்திரவதை செய்த தந்தை கைது

3 வயது மகனை சித்திரவதை செய்த தந்தை கைது

தனது 3 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (24) இரவு எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரை எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேக நபரும் குழந்தையும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

சந்தேகநபர், குழந்தையின் கைகளை உயர்த்திய படி தரையில் மண்டியிட வைத்துள்ளதுடன், குழந்தை பசிக்காக உணவை கோரியுள்ளது.

இதனையடுத்து குழந்தையை கடுமையான வார்த்தைகளால் திட்டிய சந்தேக நபர், குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை, குழந்தையை கொடூரமாக நடத்தும் வீடியோக்களை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles