வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக வரையறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று(24) முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு – 2,500 ரூபாவுக்கும்
முச்சக்கரவண்டிகளுக்கு – 3,000 ரூபாவுக்கும்
கார், வேன்களுக்கு – 10,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
பேருந்துகள் மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இந்த மட்டுப்பாடுகள் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.