அரச மற்றும் தனியார் நிறுவன வளாகங்களில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் ஆய்வு அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,500 ஆக உயர்ந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.
அதிகளவில் டெங்கு பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.