ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு கஜமுத்துகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசி திருத்தும் நிலையமொன்றை நடத்தும் புத்தல, படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இரு கும்பல்களும் புத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதன் பின்னரே சந்தேகநபரையும் இரண்டு கும்பலையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.