அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மே மற்றும் ஜூன் மாதங்களில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலை மறியல் காரணமாக பணிக்கு சமூகமளிக்காத அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.