அனுராதபுரம் – மெதவச்சி பிரதான வீதியின் சாலியபுர பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (23) இரவு இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன், முச்சக்கர வண்டி மற்றும் கை உழவு இயந்திரம் போன்றன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்இ வேனின் சாரதியும் முச்சக்கரவண்டியின் சாரதியும் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்தில் இருந்து மெதவச்சி நோக்கி உழவு இயந்திரம் சென்ற போது, பின்னால் பயணித்த முச்சக்கரவண்டி கை உழவு இயந்திரத்துடன் மோதி வீதிக்கு எதிர் திசையில் வந்த வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.