உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 47 பொலிஸ் நிலைய அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனினால் இந்த இடமாற்றங்கள் ஜூலை 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.
210 பொலிஸ் நிலைய அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியை கோரியிருந்த நிலையில், முதற்கட்டமாக 47 பொலிஸ் நிலைய அதிபர்கள் மட்டும் இடமாற்றம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் நிலைய அதிபர்களில், ஒழுக்கம் மற்றும் வினைத்திறன் மீறல் காரணமாக சுமார் 20 பேர் பொதுக் கடமைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.