Friday, March 14, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது

10 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது

தனது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தையொருவர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டார்.

வெல்கொல்ல – பசறை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக குறித்த சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சிறுமியின் தாய் அவரிடம் விசாரித்த போது, ​​கடந்த 19ஆம் திகதி தாய் வயல் வேலைக்குச் சென்ற போது தந்தை செய்த செயல் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, சிறுமியின் தாய் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுமி பசறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles