Wednesday, January 14, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதம்மிக்க நிரோஷன் சுட்டுக்கொலை: சந்தேக நபர் ஒருவர் கைது

தம்மிக்க நிரோஷன் சுட்டுக்கொலை: சந்தேக நபர் ஒருவர் கைது

2002 ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த தம்மிக்க நிரோஷன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அம்பலாங்கொடை பொலிஸார் சந்தேக நபரை இன்று காலை கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொலைபேசி தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தம்மிக்க நிரோஷனை கொலை செய்ய மூவர் வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதில் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன் நேற்று இரவு அம்பலாங்கொட கந்வேத்த மாவத்தையில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles