Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண திருத்தத்துக்கு நிகராக நீர் கட்டணத்தில் திருத்தம்

மின் கட்டண திருத்தத்துக்கு நிகராக நீர் கட்டணத்தில் திருத்தம்

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்துடன், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்த வாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்த நீர் வழங்கல் சபை, தற்போது 6.2 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles