ருவன்வெல்ல, கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றுக்கு அருகில் பேச்சு குறைபாடுள்ள அவரது தாயார் மயங்கி கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தெவ்மி அமயா என்ற 4 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.