மல்சிறிபுர, பன்லியந்த பிரதேசத்தில் இரண்டு சொகுசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (17) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும், கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் மட்டக்களப்பு பேருந்தின் சாரதி படுகாயமடைந்து பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.