அத்துகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த க்ளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் க்ளப் வசந்தவின் மனைவிக்கு, மர்ம நபர்கள் மலர் வளையம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தையடுத்து வைத்தியசாலையை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் க்ளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் க்ளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.