லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த நிலையில் 139 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கைக் கடந்தது.