ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்க வேண்டிய 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசின உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06 வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.