ஆங்கில கால்வாயைக் கடக்கும் முயற்சியின்போது படகு கவிழ்ந்ததில் 4 ஏதிலிகள் உயிரிழந்ததாகப் பிரான்ஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
வடக்கு பிரான்ஸ் கரையோரப் பகுதியில் நள்ளிரவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
மயக்கமடைந்த நிலையில் இருந்த நான்கு பேரைக் காப்பாற்ற முடியாமல் போனதாகக் கடலோரக் காவல்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் 63 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.