ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இம்மாதம் 16ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரையும் சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, தாமரைத் தடாகம் அரங்கில் நடைபெறவுள்ள யுனெஸ்கோ அமைப்பின் உறுப்புரிமை பெற்ற இலங்கையின் 75 வது ஆண்டு கொண்டாட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
மேலும் இலங்கையில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களையும் அவர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.