Wednesday, September 17, 2025
29.5 C
Colombo
செய்திகள்உலகம்ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள் - 66க்கும் மேற்பட்ட பயணிகள் மாயம்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள் – 66க்கும் மேற்பட்ட பயணிகள் மாயம்

நேபாளத்தில் – மதன்- ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. 

இந்த விபத்தில் 66க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

நெடுஞ்சாலையில் பயணித்த இரண்டு பேருந்துகள் மீது பாரிய மண்மேடு விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய நேபாளத்தில் உள்ள மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று (12) காலை இந்த விபத்து நடந்துள்ளது.

தற்போது அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேபாளத்தின் மத்திய பகுதியில் இருந்து பாயும் திரிசூலி ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles