Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுக்ளப் வசந்தவின் இறுதி சடங்குக்கு அச்சுறுத்தல் - பலத்த பொலிஸ் பாதுகாப்பு

க்ளப் வசந்தவின் இறுதி சடங்குக்கு அச்சுறுத்தல் – பலத்த பொலிஸ் பாதுகாப்பு

அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலத்தை இறுதி அஞ்சலிக்காக பொரளை மலர்சாலையில் வைக்கக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற அழைப்பு ஒன்றினூடாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸாருக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொரளை மலர்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (08) அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானதுடன், 4 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை, க்ளப் வசந்த என்பவர் அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் வர்த்தக நிலையத்தை ஆரம்பிக்க வந்ததிலிருந்து சுட்டுக் கொல்லப்படும் வரை கொலைத் திட்டத்தைச் செயல்படுத்தியதாகக் கூறப்படும் லொக்கு பெடி என்பவர் டுபாயிலிருந்து நேரலையில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles