Saturday, April 19, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்தரையிரங்கும் போது திடீரென தீப்பற்றிய விமானம்

தரையிரங்கும் போது திடீரென தீப்பற்றிய விமானம்

சவுதி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானமொன்று பாகிஸ்தானில் தரையிறக்கும் போது திடீரென தீப்பிடித்துள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் நேற்று (11) தரையிறங்கும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

297 பயணிகளுடன் ரியாத்தில் இருந்து பெஷாவர் வந்தடைந்த இந்த விமானம், தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு, விமானத்திலிருந்த 276 பயணிகளும், 21 பணியாளர்களும் அவசர கதவு வழியாகக் கீழே இறக்கி விடப்பட்டனர்.

இதேவேளை தீயணைப்பு படையினர் விமானத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles