10,000 பேருக்கு பசளைகளை வழங்காது போனால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து 300 முதல் 400 ரூபாவுக்கு விற்பனை செய்ய நேரிடும் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இதில் 40,000 மெட்ரிக் டன் நெல் பயிர் செய்கைக்கும், 20,000 மெட்ரிக் டன் சேனை பயிர் செய்கைக்கும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக, நெல், காய்கறி, பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பயிர்களுக்கான விதைகள் போதுமான அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.