Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகள்

குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

மக்களுக்கு உரிமைகளை வழங்குவதில் முக்கியமாக கவனம் செலுத்தினோம். காணியின் உரிமை அல்லது வீட்டின் உரிமை மிகவும் முக்கியமானது. இதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினோம். இரண்டு வருடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அனுகூலத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம். இரண்டே ஆண்டுகளில் இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க முடிந்தது. இந்நாட்டு விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும் என நான் நீண்டகாலமாக கூறி வருகின்றேன். அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தோம்.

உறுமய திட்டத்தை கிராமத்திற்கு மட்டுப்படுத்தாமல் நகரத்திற்கு கொண்டு வர முடிந்தது. கிராமங்களில் 20 இலட்சம் பேருக்கு உறுமய திட்டத்தின் கீழ் காணி உரிமை கிடைக்கும்.

கொழும்பில் இரண்டரை இலட்சம் பேருக்கு வீட்டு உரிமை கிடைக்கும். இந்த வீடுகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும். மேலும் அதை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். அதில் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எனவே, இது உங்கள் வாழ்வில் கிடைத்த ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகக் கருதுகிறேன்.

மக்களுக்கு இயன்ற அளவு நிவாரணம் வழங்க அரசு என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்த நாட்டு மக்கள் படும் இன்னல்களை நாம் அனைவரும் அறிவோம்.

நம் நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. சமுர்த்தி நிவாரணம் போன்று அஸ்வெசும திட்டத்தின் மூலம் மக்களுக்கு மூன்று மடங்கு நன்மைகளை வழங்கினோம்.

எங்களின் அர்ப்பணிப்பினால்தான் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்தது. ஏன் ஏனைய அரசாங்கங்களால் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை? எனவே இந்த அமைச்சர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற வேண்டும். இந்த செயற்பாடுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர வேண்டும்.

நாங்கள் பெற்ற வெளிநாட்டுக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது குறித்து எங்களுக்குக் கடன் வழங்கிய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனும், சீனாவின் எக்சிம் வங்கி மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் நாம் உடன்பாட்டை எட்டியுள்ளோம். அதன்படி நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து 08 பில்லியன் ரூபாவை குறைந்துள்ளது.

அதேபோன்று, கடனை திருப்பிச் செலுத்த 2042 வரை கால அவகாசம் கிடைத்ள்ளது. எனவே இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். யாரும் பழைய நிலைக்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த ஒப்பந்தத்தை நாம் பாதுகாக்காவிட்டால், எதிர்காலத்தில் ஒரு நாடு என்ற வகையில் மிகவும் கடினமான சூழ்நிலையை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும், நாம் எப்போதும் கடன் பெற முடியாது. எனவே, நாம் வருமானம் ஈட்டக்கூடிய ஏற்றுமதி பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும்.

இந்த இரண்டு இலக்குகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். எவருக்கும் இதனை மாற்ற இடமளிக்க வேண்டாம். உங்களின் எதிர்காலம் இன்று உங்கள் கைகளிலேயே இருக்கின்றது.

உங்களை விட உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு அவசியமான சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். இன்று மக்களுக்கான உரிமைகளை வழங்குவதன் மூலம் நாம் அதற்காக செய்யக்கூடிய சிறந்த செயற்பாடை நாம் நிறைவேற்றியுள்ளோம் என்று நான் நம்புகிறேன்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles