Wednesday, April 30, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்கிள் - லொறி விபத்து: இருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் – லொறி விபத்து: இருவர் படுகாயம்

எல்ல-வெல்லவாய வீதியில் 7 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெல்லவாயவிலிருந்து எல்ல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியின் வளைவில் சறுக்கி வெல்லவாய நோக்கிச் சென்ற லொறியின் முன்பகுதியில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணும் அவரது 18 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதியை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles