மிகவும் சூட்சுமமான முறையில் போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருக்கலன்பிட்டி, 5 ஆம் கட்டை பிரதேசத்தில் இன்று (10) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டவிரோதமாக 550 போதை மாத்திரைகளை கடத்திய பேசாலை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.