கேல்ல, இறக்குவானை வீதியில் உள்ள கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலைத் தோட்ட உரிமையாளரான 63 வயதுடைய நபரே இவ்வாறு பலியானார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.