பூஸா உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்றும் தொலைபேசி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படை புஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று (07) பூஸா உயர்பாதுகாப்பு சிறைச்சாலையின் வைத்தியசாலையிலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் அவசர சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்றும், தொலைபேசி உபகரணங்கள் அடங்கி சீமெந்து பொதியொன்றும் வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.