லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி ஃபால்கன் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் ரூபா அபராதம் விதிக்க போட்டிக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்.பி.எல். போட்டியின் ஆடை பொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை காரணமாகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் அந்தந்த அணிகளுக்குரிய ஆடைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் வனிந்து வேறு இலச்சினையுடன் கூடிய முகமூடி அணிந்து துடுப்பெடுத்தாட வந்ததன் மூலம் போட்டியின் ஆடை தொடர்பான விதிமுறைகளை அவர் மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தின் மூலம் அனைத்து வீரர்களும் தங்களுக்குச் சொந்தமில்லாத ஆடைகளை அணிய வேண்டாம் என போட்டிக் குழு அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களில் வனிந்து ஹசரங்க பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.