Sunday, March 15, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று இரவு 9 மணி முதல் இன்று பிற்பகல் 3 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் கொலன்னாவ நகரசபை எல்லை, கடுவெல நகரசபை எல்லை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்தை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு இந்த நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படும் நீர் குழாயின் அவசர பராமரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles