லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் காலி மார்வெல்ஸ் அணியின் சார்பில் இசுரு உதாண 52 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த நிலையில் 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.