பொசன் போயா தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்துக்கு கருவாட்டு குழம்பு தயாரிக்கப்பட்டு கொண்டிருந்த போது, அந்த பாத்திரத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பெக்கேகம பகுதியைச் சேர்ந்த ஷயானி மெதும்சா என்ற 9 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி சிறுமி தனது தாயுடன் அங்கு தங்கியிருந்த வேளையில் குறித்த சிறுமி கருவாட்டு கறி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்துக்குள் விழுந்து விட்டார்.
படுகாயமடைந்த சிறுமி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழுந்துள்ளார்.