Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலியவின் பிணை கோரிக்கை தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

கெஹெலியவின் பிணை கோரிக்கை தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுமா இல்லையா மற்றும் அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவு ஒகஸ்ட் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்

குறித்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles