Sunday, April 20, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று (03) இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் 88ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

62 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலை 1936ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 220இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலங்கினங்களைப் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles