Tuesday, January 20, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு67வது மாடியிலிருந்து கீழே விழுந்து சிறுவனும் சிறுமியும் பலி

67வது மாடியிலிருந்து கீழே விழுந்து சிறுவனும் சிறுமியும் பலி

கொம்பனிதெருவில் உள்ள சொகுசு குடியிருப்பு கட்டடத்தின் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவனும் சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவியும், மாணவனும் கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ளபாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து இருவரும் கீழே விழுந்த நிலையில், 3ஆவது மாடியின் மேல்தளத்தில் விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles