Sunday, April 20, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூட்சுமமான முறையில் கஞ்சா பயிரிட்ட ஒருவர் கைது

சூட்சுமமான முறையில் கஞ்சா பயிரிட்ட ஒருவர் கைது

மிக சூட்சுமமான முறையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் ஹம்பாந்தோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரலிபொல பிரதேசத்தில் அண்மையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அங்கு அரை ஏக்கர் பரப்பளவில் ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் பயிரிடப்பட்ட சுமார் 3,000 கஞ்சா செடிகளுடன் 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக 10 கஞ்சா மரங்கள் திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய கஞ்சா மரங்கள் எரித்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles