Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண் படுகொலை: ஒருவர் கைது

பெண் படுகொலை: ஒருவர் கைது

பியகம – மல்வான பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நவசந்தகல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இக்கொலை தொடர்பில் யக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தனது கள்ளக் காதலியை இவ்வாறு அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் வைத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலை சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட மற்றும் பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles