Friday, November 15, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதன்னை விடுவிக்குமாறு கோரி ஹிருணிகா மேன்முறையீடு

தன்னை விடுவிக்குமாறு கோரி ஹிருணிகா மேன்முறையீடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை பிணையில் விடுவிக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கோரிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles