Sunday, September 21, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்இத்தாலியில் மனைவியை தாக்கிய கணவன் சடலமாக மீட்பு

இத்தாலியில் மனைவியை தாக்கிய கணவன் சடலமாக மீட்பு

இத்தாலி, ரோம் நகரில் பணியாற்றி வந்த இலங்கை பெண்ணொருவர் கடந்த 26 அம் திகதி தனது கணவனால் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கானார்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் கணவரான சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடும்ப தகராறு காரணமாக அவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு, தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்த பெண்ணொருவர் உதவி கேட்டு கூச்சலிட்டு வீதியில் ஓடுவதாக பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய, அவசர உதவி சேவை மூலம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரும் அவரது கணவரும் அங்கு பல நாட்களாக பணியாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles