2024 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2025 இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவித்திருந்த போதிலும். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் மற்றும் இது குறித்த விரிவான மதிப்பீடுகளின் மூலமே கட்டுப்பாடு தளர்வு குறித்து தீர்மானிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி, 2025ல் 8 பில்லியன் டொலர், 2026ல் 10 பில்லியன் டொலர், 2027ல் 14 பில்லியன் டொலர் என்ற அந்நிய செலாவணி இருப்புக்கான குறிப்பிட்ட இலக்குகளுடன், அதிகரித்த வாகன இறக்குமதி மூலம் இந்த கையிருப்புகளை அரசாங்கம் குறைக்க முடியாது.
நிதியமைச்சின் கீழ் உள்ள குழு தற்போது தகவல்களை சேகரித்து எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டத்தை வகுத்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தினார்.
அத்துடன் இது தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.