Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

நிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

நிவிதிகல – பாத்தகட பிரதேசத்தில் இன்று (26) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது வீட்டின் முற்றத்தில் இருந்த போது, ​​முகமூடி அணிந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வந்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது கீழ் காலில் தோட்டா தாக்கியதால் அவர் நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிவிதிகல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles