ஹபுதல பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சீலகம பகுதியில் கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஐவர் பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.