Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்விளையாட்டுதென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி

தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி

ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Roston Chase அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணி சார்பில் Tabraiz Shamsi 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களில் 124 ஓட்டங்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய தென்னாபிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்பில் Tristan Stubbs அதிகபட்சமாக 29 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Roston Chase 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles