Saturday, April 5, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு289 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

289 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இந்த ஆண்டு பொசொன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்ப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர்களில் 06 பேர் பெண்கள் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளை உரிய நிபந்தனைகளுக்கு அமைய இன்று (21) விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 19 கைதிகளும், மஹர சிறைச்சாலையில் 30 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலையில் 30 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 28 கைதிகளுமாக மொத்தம் 289 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles