Friday, March 14, 2025
28.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

இருபதுக்கு20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Johnson Charles அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Jofra Archer, Adil Rashid, Moeen Ali மற்றும் Liam Livingstone ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

181 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் Phil Salt அதிகபட்சமாக 87 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Andre Russell மற்றும் Roston Chase ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles