இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முதல் சூப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகின.
நேற்றைய முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 194 ஓட்டங்களை பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் Quinton de Kock, 74 ஓட்டங்களை பெற்றார்.
அமெரிக்க அணி சார்பில் Harmeet Singh மற்றும் Saurabh Netravalkar ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
195 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய அமெரிக்க அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
அமெரிக்க அணி சார்பில் Andries Gous ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை பெற்றார்.
தென் ஆப்பிரிக்க அணி சார்பாக Kagiso Rabada, 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கும் அமெரிக்க அணிக்கும் இடையிலான போட்டியில் தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.