பொசொன் போயா தினத்தினை முன்னிட்டு அனுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று (20) முதல் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனுராதபுரம் புனித பூமிக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே துணைப் பொது மேலாளர் என். ஜே. இதிபொலகே இதனை குறிப்பிட்டார்.
அனுராதபுரத்திற்கு வரும் மக்களுக்காக மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.