Saturday, November 16, 2024
23 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைத்தொழில் துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

கைத்தொழில் துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும் என்றும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்த “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் சிலர் நீதிமன்றத்தை நாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனவும் இவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், தேசிய கொள்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்டர்நெசல் இன்டஸ்ரியல் எக்ஸ்போ- 2024 (சர்வதேச கைத்தொழில் கண்காட்சி) இன்று (19) ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவின் ஆலோசனையின் பேரில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சி, இன்று முதல் ஜூன் 23 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச தொழில் முனைவோர் மற்றும் உள்ளூர் பாரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினர் இதில் பங்கேற்கின்றனர். 1307 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கிய இக்கண்காட்சியில் பசுமை தொழில்துறை வளாகம் தனி வலயமாக சேர்க்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்த கண்காட்சிக்கு இணைந்ததாக பசுமை தொழில்மயமாக்கல் குறித்த நிபுணத்துவ மாநாடும் நடைபெறும்.

“சர்வதேச கைத்தொழில் எக்ஸ்போ 2024” கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி, கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது Ceylon Plaza கணினி மென்பொருள், சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles