Tuesday, July 29, 2025
29.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுபலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய இலங்கை அணி

பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இன்று (19) நாட்டை வந்தடைந்துள்ளனர்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் டுபாயில் இருந்து இன்று காலை 08.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வீரர்கள் செய்த தவறுகளாலும், அவர்கள் சரியாக விளையாடாததாலும் தான் டி20 போட்டியில் இருந்து விலக நேரிட்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

வழமையாக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாக வெளியில் வந்தாலும், அவர்களுக்கு இன்று பணம் செலுத்தி ‘சில்க் ரூட்’ முனையத்தின் ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles