Tuesday, March 18, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெலே மாலுவின் உதவியாளர் ஐஸுடன் கைது

வெலே மாலுவின் உதவியாளர் ஐஸுடன் கைது

போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் ‘வெலே மாலு’ என்றழைக்கப்படும் குமார என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சஞ்சியாரச்சி வத்த பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அவரிடமிருந்து 02 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் மீட்கப்பட்டது.

கொழும்பு 12, சஞ்சியாராச்சி வத்தை, ஹன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் மற்றும் ஹன்வெல்ல பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles